தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்.. நண்பர்கள் உடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஐந்து மாத காலமாக 24 வயது இளைஞர் ஒருவர் பழக்கமாகியுள்ளார்.

இதையடுத்து இருவரும் நண்பர்களாகப் பேசி வந்துள்ளனர். இந்தநிலையில் இருவரும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் பேசி வந்த நிலையில், அந்தப் பெண்ணை அவர் நேரில் பார்க்க வேண்டும் என அழைத்துள்ளார். இதனால் அந்தப் பெண் வீட்டில் தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு செல்வதாகக் கூறிவிட்டு, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி வந்துள்ளார்.

இதையடுத்து, இளைஞரின் அறைக்கு அழைத்துச் சென்று, அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது நண்பர்கள் இருவரையும் தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார், அந்த இளைஞர். பின்னர் மூவரும் சேர்ந்து குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து, மீண்டும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தீயிட்டுக் கொளுத்திய இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

மேலும், அப்பெண்ணை மூவரும் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்தி, அவர் அணிந்திருந்த தங்க கம்மலைப் பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தான் இருக்கும் இடத்தினை அவரது அண்ணனுக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து கடந்த 28ஆம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்ற அப்பெண்ணின் அண்ணன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லாவரம் மகளிர் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, அங்கு இருந்த 24 வயது இளைஞரைக் கைது செய்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் வருவதை முன் கூட்டியே அறிந்த அவரது நண்பர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், “விசாரணையில் அந்த இளம்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். முழுமையான விசாரணைக்குப் பின் தான் உண்மை தெரிய வரும். மேலும், அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details