சென்னை: அமைந்தக்கரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வருபவர் முகமது நவாஸ்(35) வீட்டில் தங்கி சட்டவிரோதமாக வேலைபார்த்த 16 வயது சிறுமி குளியலறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, முகமது நவாஸ் தன் வழக்கறிஞர் வாயிலாக அமைந்தகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
முதலில், சிறுமி வேலை முடிந்து குளியலறையில் குளிக்கச் சென்றதாக கூறப்பட்டது. அப்போது நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நாசியா இருவரும் ஓடிச்சென்று கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது சிறுமி தரையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் என்று நவாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் இந்த மரணம் தொடர்பாகக் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சிறுமியின் உடலில் ஆங்காங்கே இருந்த காயங்கள், சிகரெட்டினால் சுடு வைத்த வடுக்கள் இருந்துள்ளன. மேற்கொண்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணையை முடிக்கிய காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமி
அதன்படி, சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் சதாசிவ மேத்தா தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஸ், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி நாசியாவும், 6 வயது குழந்தையும் இவருடன் வசித்து வருகின்றனர்.
மனைவிக்கு வேலைப்பழுவைக் குறைப்பதற்காக, சுமார் 14 மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை (வேலைக்கு சேரும்போது சிறுமியின் வயது 14) வீட்டு வேலைக்காக சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தியுள்ளார். சிறுமி இவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். முகமது நவாஸின் சகோதரி வாயிலாகத் தான் இந்த சிறுமி வேலைக்கு சேர்த்துவிடப் பட்டுள்ளார். சிறுமியின் தந்தை காலமானதால், தாயின் அரவணைப்பில் சிறுமி இருந்ததுள்ளார். மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டுக்கும் மேலாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்ததும், இந்த சூழலில் கணவன் மனைவி என இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமி