தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு! - SOUTHERN RAILWAY

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை புறநகர் ரயில்கள் நாளை ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 9:23 PM IST

சென்னை:ஆங்கிலபுத்தாண்டை முன்னிட்டு சென்னை புறநகர் ரயில்கள் நாளை ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மூர் மார்க்கெட் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி, MRTS
( சென்னை கடற்கரை - வேளச்சேரி ) ஆகிய வழிகளில் இயங்கும் ரயில்கள் நாளை (01.01.2025) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சில ரயில்கள் இயக்கப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மூர் மார்க்கெட் - அரக்கோணம் செல்லும் ரயில்கள் (43102) அதிகாலை 4.35 மணி, (43504) காலை 8.00 மணி, (43224) 11.25 மணி, (43422) பிற்பகல் 3.50 மணி, (43834) இரவு 10.30 மணிக்கும் புறப்படும். மேலும் (43505) காலை 8.10 மணி, (43871) 8.15 மணி, (43519) இரவு 8.10 மணி, (43719) இரவு 8.15 மணி, (43439) இரவு 9.10 மணி ஆகிய ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் புறப்படும்.

தெற்கு ரயில்வே அறிவிப்பு (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் (66045) காலை 10.30 மணி, (66034) காலை 10.01 மணி, (40555) மாலை 5.55 மணி, (40071) மாலை 6.01 மணிக்கும் புறப்படும். மேலும் 40073, 40075, 40077, 40079, 40081, 40083, 40085, 40087, 40089, 40091, 40093 40062, 40064, 40066, 40068, 40070, 40072, 40074, 40078, 40080, 40082, 40084, 40086, 40088, 40090, 40092. 40094, 40096 ஆகிய ரயில்கள் புறப்படும் நேரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 2 ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்கள் வழக்கமான கால அட்டவணையில் இயங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details