சென்னை:சென்னை நெற்குன்றம் முனியப்பா நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் 'வெற்றிவேல் முருகா' என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் கார்மேகம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மேலாளர் கார்மேகம், நிறுவன பணத்தை மோசடி செய்ததாக மாரிமுத்து குற்றம்சாட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் இருந்த கார்மேகத்தை, தினசரி பண வசூலுக்கு வருமாறு இருச்சக்கர வாகனத்தில் மாரிமுத்து அழைத்து சென்றுள்ளார்.
இருவரும் பண வசூலுக்காக கோயம்பேடு சந்தை அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தை ஓட்டிய கார்மேகத்தை, மாரிமுத்து கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கார்மேகம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.