தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. நேரில் ஆஜராக உத்தரவு! - Senthil Balaji Petition dismissed - SENTHIL BALAJI PETITION DISMISSED

Senthil Balaji Case: அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 2ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 6:56 PM IST

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில்பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி புதிதாக இரன்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், குற்றச்சாட்டு பதிவை 15 நாட்கள் தள்ளிவைக்க கோரி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

மேலும், ஒரு வழக்கை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்தால் கீழமை நீதிமன்றம் அதற்கான போதிய நேரத்தை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு தொடங்கிவிட்டால் அனைத்தும் செல்லாதாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அமலாகத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளதாக கூறும் வழக்கு இதுவரை எண்ணிடப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு பதிவை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதுபோன்று தொடர்ந்து நேரம் கேட்பதாக தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 2ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு : இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 2 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் நடைபெற்ற கடைசி நகர்மன்ற கூட்டம்.. ஏன் தெரியுமா? - Pudukottai municipal corporation

ABOUT THE AUTHOR

...view details