தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 28வது முறையாக நீட்டிப்பு! - Senthil Balaji Judicial Custody

Senthil Balaji Judicial Custody: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 28வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 28வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 28வது முறையாக நீட்டிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 4:47 PM IST

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகையின் நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (மார்ச் 21) முடிவடைவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் ஒரு நாள் (மார்ச் 22) நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் 28வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுக்கும் பல்வேறு அமைப்புகள்! - Political Parties Supporting DMK

ABOUT THE AUTHOR

...view details