தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி நிறுவன மோசடி; தேவநாதன் யாதவ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு! - Devanathan Yadav fund Cheat case - DEVANATHAN YADAV FUND CHEAT CASE

Devanathan Yadav fund cheat case: நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் ஜாமீன் மனுவை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தேவநாதன் யாதவ், கைது தொடர்பான கோப்புப் படம்
தேவநாதன் யாதவ், கைது தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 3:31 PM IST

Updated : Aug 23, 2024, 8:35 PM IST

சென்னை:சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தேவநாதன் உள்பட 3 பேரும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு ஆஜர்படுத்தபட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மூன்று பேரையும் 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்ப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் பட்டிருந்த நிலையில், இன்று அந்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வைப்பீடுகள் முதிர்வடைந்தும் தங்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை என்றும், இந்த நிதி முறைக்கேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தனர்.

மேலும், காவல்துறை தரப்பில் டி.பாபு ஆஜராகி, இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளார். 800க்கும் மேற்பட்டடோர் புகார் அளித்துள்ளனர். தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் யாதவ் உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை, ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:தருமபுரியில் தொடரும் சட்டவிரோத கருக்கலைப்பு.. வீட்டின் மாடியில் நர்ஸ் செய்த கொடூர சம்பவம்.. சிக்கியது எப்படி?

Last Updated : Aug 23, 2024, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details