தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன சோதனையைத் தீவிரப்படுத்துங்கள்; காவல் ஆணையர் அருண் உத்தரவு!

சென்னையில் முக்கிய நேரங்களில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்த காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

Police Commissioner Arun
காவல் ஆணையர் அருண் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 5:07 PM IST

சென்னை: மாநகரின் முக்கிய நேரங்களில் வாகன சோதனையை தீவிரபடுத்த சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக காலை 9 மணி முதல் 11:00 மணி வரையிலும், அதேபோல் மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் உள்பட 15 பேர் அடங்கிய குழுக்களாக முக்கிய பகுதிகளில், பரபரப்பான நேரங்களில் வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருள் கடத்தல், செல்போன் பறிப்பு, ரவுடிகளை கண்காணிக்க இந்த வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க
  1. நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை.. திருநெல்வேலியில் நிகழ்ந்த சோக சம்பவம்
  2. போலீசாரை பேனா கத்தியால் தாக்கியவர் மாவு கட்டுடன் கைது..!
  3. சார்ஜ் போடாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓட்டலாம்!

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சதுக்கம், அண்ணா சாலை, சேப்பாக்கம், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகன சோதனையைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் இதுபோன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details