ETV Bharat / state

மாஞ்சோலை தேயிலை தோட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! - MANJOLAI TEA ESTATES CASE

மாஞ்சோலையில் பூர்வக்குடிகளாக வாழ்ந்து வரும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 8:10 PM IST

சென்னை:மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை அகற்றுவதற்கு எதிராக 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், "கடந்த 1937ம் ஆண்டு சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. பின்னர் 1962 முன்டந்துறை வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

சுமார் 8,300 ஏக்கர் வனப்பகுதி நிலம் 99 வருட குத்தகைக்கு மட்டுமே வழங்கப்பட்டது.குத்தகை காலம் 2028 குத்தகை காலம் முடிவடைகிறது. அதனால், அங்கே பணி புரிந்த தொழிலாளர்கள் சுய விருப்பத்தின் பேரில் வேலையிலிருந்து விலகினர். முறைப்படி பாம்பே டிரேடிங் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பாம்பே டிரேடிங் நிறுவனம் தொழிலாளர்களுக்கான பண பலன்களை அரசிடம் வழங்கிவிட்டது.

வனப்பகுதியில் பழங்குடியினர் மட்டும் குடியிருக்க உரிமை வழங்கப்பட்டது. வனப்பகுதியில் சுய வேலையில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களாகக் கருதப்பட்டு வனப்பகுதியில் இருக்க உரிமை இல்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் மாஞ்சோலையில் செயல்படும் அரசின் தேயிலை நிறுவனத்தைக் கைவிட அரசு முடிவு செய்தது.

சுமார் 400 தொழிலாளர்கள் இதனால் வேலை இழக்கும் நிலை ஏற்படும். அரசுக்கு சொந்தமான தேயிலை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. சுமார் 700 பேரை மீண்டும் மாஞ்சோலையில் குடியேற்ற அனுமதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர்களின் மேம்பாட்டுக்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட 14 லட்சம் வழங்கப்படுகிறது. மணிமுத்தாறு பகுதியில் 240 வீடுகள் கட்டி பயனாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளது. திருநெல்வேலியில் 390 வீடுகள் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாஞ்சோலை மக்களுக்கு வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது. 3 மாதங்களில் பணிகள் முடிந்து பயனாளர்களுக்கு வழங்கப்படும்.

அண்ணல் அம்பேத்கர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் பழங்குடியினருக்குத் தொழில் தொடங்க கடன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 75 லட்சம் வரையில் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு தொழிற் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1.5 லட்சம் ரூபாய் பெண்கள் சுயதொழில் தொடங்க கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டுமா?"- உயர்நீதிமன்றம் வேதனை!

இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "மாஞ்சோலை குடியிருப்பு வாசிகளை அகற்றுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்க வேண்டும். வலுக்கட்டாயமாக தொழிலாளர்களை அப்புறப்படுத்த அரசு முயற்சிக்கிறது. சுமார் 75 வருடம் ஒருவர் வனப்பகுதியில் வசித்தால் அவர்களை பழங்குடியினராக கருதி அவர்களுக்கு தேவையான வசதிகளை அங்கேயே செய்து தர வேண்டும்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்தார்கள் என்பதற்காக உரிமைகளை மறுக்க முடியாது. 47 ரூபாய் சம்பளத்தில் தொடங்கிய மாஞ்சோலை தொழிலாளர்களின் பயணம் 400 ரூபாயில் முடிந்துள்ளது. நவீன கால கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் நடத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு அவர்களுக்காக பணப்பலன்களை பெற உரிமை உள்ளது. கடந்த 96 வருடங்களில் மனித - மிருக மோதல்கள் ஏதும் மாஞ்சோலையில் தோட்டத்தில் ஏற்படவில்லை.

மூதாதையர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து, வலுக்கட்டாயமாக மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். கடந்த விசாரணையின் போது மக்களின் மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது அப்புறப்படுத்த நினைப்பது முரணானது. கடந்த 2006ம் ஆண்டு மாஞ்சோலை கிராம பஞ்சாயத்துத் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் மாஞ்சோலை மக்களை வனப்பகுதியிலிருந்து அகற்ற முடியாது" என தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைமுறை தலைமுறையாக வனப்பகுதியில் இருந்தவர்கள் பாம்பே நிறுவனத்தில் வேலை செய்தார்கள் என்பதற்காக அப்புறப்படுத்தலாமா? என கேள்வி எழுப்பினர். மேலும், அனைத்து தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.