சென்னை:தொழில்துறையுடன் இணைந்து இந்திய அரசாங்கத்தால் நிறுவப்படும் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சில் (CIDC), இந்திய கட்டுமானத் துறையின் பல்வேறு கூறுகளை தீவிரமாக ஈடுபடுத்தும் பிரதிநிதி அமைப்பாக செயல்படுகிறது. CIDC இந்திய கட்டுமானத் தொழிலை தொழில்முறை மற்றும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கும், சமூகம் மற்றும் தேசத்தின் பெரிய நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கும் உழைத்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில், 15வது CIDC விஸ்வகர்மா விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி,
சிறந்த கட்டுமானத் திட்டங்கள்:திட்டச் செயலாக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறந்த முயற்சியினை அங்கீகரிக்கும் வகையிலும், நவீன சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட உள்கட்டமைப்பை வழங்கி வருவதற்காகவும் "சிறந்த கட்டுமானத் திட்டங்கள்" பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இவ்விருதினை பெற்றுள்ளது.
கட்டுமான சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்களின் நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிலையான நடைமுறைகள் மற்றும் பொறுப்பான கூட்டாண்மை குடியுரிமைக்கான அதன் அர்ப்பணிப்பால் "கட்டுமான சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்" பிரிவின் கீழ் இவ்விருதினை பெற்றுள்ளது.