சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை மறுநாள் (மே 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் மழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்று காலை தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியது. இது நாளை மறுநாள் (மே 24) காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மழை மேலும் தீவிரமடையும்.