சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகி உள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) : தோகமலை (கரூர்) 13 செ.மீ, திருப்பத்தூர் , ஏற்காடு 10 செ.மீ, பஞ்சப்பட்டி (கரூர்), வாழப்பாடி (சேலம்), சிறுகமணி (திருச்சிராப்பள்ளி), சேலம் (சேலம்), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), விராலிமலை (புதுக்கோட்டை) 9 செ.மீ,
மாயனூர் (கரூர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), கடவூர் (கரூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 8 செ.மீ, ஓசூர் பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி) 7 செ.மீ, பண்ருட்டி, துறையூர் (திருச்சிராப்பள்ளி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பார்வூட் (நீலகிரி), ஆத்தூர் (சேலம்), ஓசூர், மணப்பாறை (திருச்சிராப்பள்ளி) 6 செ.மீ, குளித்தலை (கரூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஓமலூர் (சேலம்), மங்களபுரம் (நாமக்கல்) 5 செ.மீ, விழுப்புரம், கல்லணை (தஞ்சாவூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), அழகரை எஸ்டேட் (நீலகிரி) 4 செ.மீ, கடவூர் (கரூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), கெடார் (விழுப்புரம்) 3 செ.மீ, கரூர் (கரூர்), திருத்தணி (திருவள்ளூர்), வீரகனூர் (சேலம்), லால்குடி (திருச்சிராப்பள்ளி) 2 செ.மீ, ஊத்து (திருநெல்வேலி), கீழச்செருவை (கடலூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), பவானி (ஈரோடு) 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :
டிச 3 : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச 4 - 9: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.