தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 50 செ.மீ மழை.. 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிககனமழை பெய்யக்கூடும் எனவும், 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் இன்று வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ) : ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) 50 செ.மீ, RSCL-2 கெடார் விழுப்புரம் (விழுப்புரம்) 35 செ.மீ, அரூர் (தர்மபுரி) 33 செ.மீ, DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி) 32 செ.மீ, DSCL மடம்பூண்டி(கள்ளக்குறிச்சி) 31 செ.மீ, RSCL-2 வளவனூர் (விழுப்புரம்) 30 செ.மீ, BASL மணம்பூண்டி (விழுப்புரம்) 29 செ.மீ, BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி) 27 செ.மீ, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி) 26 செ.மீ, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) 25 செ.மீ, ஏற்காடு 24 செ.மீ, ஜமுனாமரத்தூர் 23 செ.மீ, BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 21 செ.மீ, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பாரூர் (கிருஷ்ணகிரி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) 20 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை :

டிச 2 : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ரெட் அலர்ட் : நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.

ஆரஞ்ச் அலர்ட் : கோயம்புத்தூர் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

மஞ்சள் அலர்ட் : கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிச 3 : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மஞ்சள் அலர்ட் : கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச 4 - 8 : தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க :"அடுத்த இரு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - டெல்டா வெதர்மேன் தகவல்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

தமிழக கடலோரப்பகுதிகள் :

டிச 2, 3 : தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச 4 - 6 : எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள் :

டிச 2 - 6 : எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள் :

டிச 2 : கேரள – தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச 3 :கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச 4 : லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச 5 : மத்திய கிழக்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச 6 : தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details