தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழக மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! - CHENNAI RAIN ALERT

அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 4:50 PM IST

சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று (டிச.12) மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.13) லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது படிப்படியாக மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. 29 இடங்களில் அதிக கனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தில் தென் தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் மத்திய மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வட தமிழகத்தில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை உள்ளது. டெல்டா மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். நெல்லை மாவட்டத்தில் அதி கனமழையும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிடங்களில் கனமழை பெய்யும்.

நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனைத் தொடர்ந்து, 48 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி, மேற்கு வடமேற்கு திசை நகர்ந்து தமிழக கடற் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டிச 17, 18 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் உள்ளிட்ட கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

இதையும் படிங்க:கனமழை; "எது வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது" - முதல்வர் ஸ்டாலின்! - TN WEATHER REPORT

மேலும், குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 வேகம் வீசும் எனவே, மீனவர்கள் இன்று குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்படுகிறார்கள். வடகிழக்கு பருவ மழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் ஒன்று முதல் இன்றுவரை பதிவான மழையின் நுழைவு 54 சென்டிமீட்டர் 32 சதவீதம். இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. இந்நிலையில் டிச.17, 18 தேதிகளில் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்றும், அதி கனமழைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 14, 15இல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வரும் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details