தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Tamil Nadu Weather Report - TAMIL NADU WEATHER REPORT

Tamil Nadu Weather Report: வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TN Weather Report
TN Weather Report (Photos credits to ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 3:00 PM IST

சென்னை:வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):பாலக்கோடு (தர்மபுரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), பாரூர் (கிருஷ்ணகிரி), மேலாலத்தூர் (வேலூர்), பையூர் AWS (கிருஷ்ணகிரி), பாலக்கோடு ARG (தர்மபுரி) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருக்கும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44.3 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட +7.5 டிகிரி செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 44 டிகிரி செல்சியஸ், வேலூரில் 43.6 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 42.7 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 42.5 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 42.3 டிகிரி செல்சியஸ், சேலம் & திருப்பத்தூரில் 42.2 டிகிரி செல்சியஸ், மதுரை (நகரம்) & நாமக்கல்லில் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் 4 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 முதல் 40 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை மீனம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸ் (+2.9 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் (+1.8 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மே 3 முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 7ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:(மே 3 முதல் மே 7 வரை)

  • முதல் 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
  • அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
  • வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.
  • அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41 டிகிரி முதல் 44 டிகிரி வரை செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி முதல் 39 டிகிரி வரை செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: மே 3 முதல் மே 7ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 - 50 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 40 - 75 சதவீதமாகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50 - 80 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை முன்னெச்சரிக்கை: மே 3 முதல் மே 4ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தொடர்ந்து, மே 5 முதல் மே 6ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 - 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:மே 3 முதல் மே 6ஆம் தேதி வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா என நம்பி மாட்டுச்சாணம் வாங்கிய இளைஞர்கள்.. திருப்பூரில் நூதன மோசடி!

ABOUT THE AUTHOR

...view details