சென்னை:தமிழ்நாட்டில் கடந்த மே 30ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளிலும் மாலை இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. தலைநகர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட உள் மாவட்டங்களில் மாலை இரவு நேரங்களில் கனமழை பெய்தது.
அதேபோல் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோரம் மாவட்டங்களாக உள்ள கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையின் முதல் சுற்று ஓய்ந்திருக்கக் கூடிய நிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இன்று தமிழகத்தில் பதிவான வெப்ப நிலை தரவு (Credits - ETV Bharat Tamil Nadu) அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் 9 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது.
மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கத்தில் 100.22 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோடு 100.04 டிகிரி ஃபாரன்ஹீட், கரூர் பரமத்தி 100.40 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரம் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட், பாளையங்கோட்டை 101.84 டிகிரி ஃபாரன்ஹீட், தூத்துக்குடி 102.02 டிகிரி ஃபாரன்ஹீட், வேலூரில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை டூ நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்; பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்! - Chennai Nagercoil Vande Bharat