சென்னை:குற்றவாளியாகச் சிறையில் அடைக்கப்பட்டவர், அவரது வழக்கில் தானே வாதிட விரும்பினால் சிறையில் இருந்தவாறே காணொலி மூலமாக வாதாட அனுமதிக்கலாம் என சுபிக்ஷா சுப்ரமணியன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுபிக்ஷா நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சுப்ரமணியன் குற்றவாளி என முடிவாகி, இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், சுபிக்ஷா சுப்ரமணியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தனக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் வழக்கறிஞரை நியமிக்காமல் தானே வாதிட விரும்பதாகவும், அதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.