சென்னை:சென்னை சாந்தோமில் உள்ள டோமினிக் சாவியோ பள்ளியில் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து இன்று அந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். இதற்கிடையே சென்னை மெரினா கடற்கரை - சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லி வரையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதி அந்த பள்ளிக்கு மிக அருகாமை என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் விரிசல்:இதனால் மெட்ரோ பணிகளின் அதிர்வு தாங்க முடியாமல் பள்ளியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களுடன் மீண்டும் வீட்டிற்கும் அழைத்து செல்ல முற்பட்டனர்.
மெட்ரோ பணியால் விரிசல் விழுந்த பள்ளி கட்டிடம் (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:சென்னை மெரினா மரணங்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரியாக்ஷன் என்ன?
மெட்ரோ ரயில் பணிகள், திடீர் விரிசல்:இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றாேர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்கள் தரப்பில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பள்ளியின் சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், அதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்க அச்சமாக இருப்பதாக தெரிவித்தனர்.
பள்ளி நிர்வாகம் பதில்:இதையடுத்துபள்ளியின் நிர்வாகம் இந்த வாரம் முழுவதும் விஜயதசமி முடியும் வரை அதாவது அக்.13ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த விடுமுறைக்குள் பள்ளியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்யப்படும் என பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வகுப்புகள்:மேலும் அதுவரை 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வகுப்புகள் தொடர்படும் எனவும், 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை எனவும், 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்