தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூனு மாசம் தான் டைம்.. செல்லப்பிராணிகள் லைசன்ஸ் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி கெடு! - chennai pets license

Chennai Corporation Commissioner Radhakrishnan: மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதட்டம் வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தெருநாயகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம்
தெருநாயகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி முகாம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 4:25 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பாக தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி முகாம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் என்.ஜி.ஓ.,கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று பயிற்சிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ''தெரு நாய்கள் எவ்வளவு உள்ளது என்ற கணக்கெடுக்கும் பணி, world veterinary service சார்பில் இன்று பயிற்சி வழங்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 10 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

கடைசியாக, சென்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நாய்கள் ஆணா, பெண்ணா மற்றும் தடுப்பூசி போட்டுள்ளதா உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்படும்.

இந்த கணக்கெடுப்பு பணிகளில் கால்நடை மருத்துவர்கள் மட்டுமின்றி மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். உலக அளவில் நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கூட அதிக மழை பெய்தது.

சென்னையை பொறுத்தவரை ஜூன் மாதம் முதல் சோழிங்கநல்லூரில் ஒரு நாளில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வடசென்னையில் 9 சென்டிமீட்டர் ஒருநாளில் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் சுரங்கபாதையை பொருத்தவரை எந்த பிரச்னையும் இல்லை. கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு உள்ளிட்ட 4 வழிகளில் மழைநீர் வெளியேறி வருகிறது. உடனுக்குடன் தேங்கும் மழைநீரை சரி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

மக்களுக்கு அத்தியாவசிய தேவையான கழிவுநீர் அகற்றும் பணி, குடிநீர் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. பல சாலைகளில் தண்ணீர் பிரச்னை சவால்கள் உள்ளது. இரவு நேர பணிகளும் இதற்காக நடைபெற்று வருகின்றன.

மழைக் காலங்களில் பொது சுகாதார பிரச்னைகள் தண்ணீர், உணவு , பூச்சிகள், கொசு போன்றவைகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும்.

மழை காலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கவனமாகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கினார். 10 ஆயிரத்து 100 நாய்கள் பிடித்து அதில் 7,165 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளது. சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிபடப்பட்டுள்ளது. அவற்றை படப்பை உள்ளிட்ட பெட் வளர்ப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 7 முதல் 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்பது மாநகராட்சி தரப்பில் வேண்டுகோள் வைக்கிறோம். மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதட்டம் இருக்கக் கூடாது. ஒரு சுகாதார பிரச்சனை அல்லாமல் நோய் பிரச்சனை இது. அனைத்து நோய்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீச்சல் குளத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

எப்போதும் மழைக்காலங்களில் கொதிக்க வைத்து நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து கை கழுவ வேண்டும். கொரோனா காலங்களில் மட்டுமான இந்த வழிமுறை கிடையாது. எல்லா நாட்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

100 இல் 5 நாய்கள் அதிகம் வெறி தன்மை கொண்டதாக உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. நாய் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நாய்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்தால் கூட அவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே கூட்டம் நடைபெற்றது. நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி அடுத்த பத்து நாட்களுக்குள் மீண்டும் தன்னார்வலர்கள் மற்றும் கால்நடை துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து கூட்டம் நடைபெற உள்ளது'' என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்.. புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்! - Chennai City police Commissioner

ABOUT THE AUTHOR

...view details