சென்னை: தமிழகத்தில் சமீப காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை துரத்தி கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள 'மெட்ரோ சோன்' என்ற மிகப்பெரிய குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு, பகல் பாராமல் சுற்றித்திரிந்து அங்கு செல்பவர்களை விரட்டி கடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று (ஜூலை 2) பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தடுப்பூசி போடப்படாத இந்த நாய்களைப் பிடித்து செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும், சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளும் சிலர் நாய்களைக் கொண்டு செல்ல ஊழியர்களை தடுப்பதாக தெரிவித்தார்.