சென்னை:கடந்த ஜூலை 10 ஆம் தேதி சென்னை மாநகராட்சி, உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர்.
இதில் நாய்களின் பாலினம், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல விபரங்கள் இந்த கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்டன. சென்னையில் 2018-ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 59 ஆயிரம் நாய்கள் இருந்தன. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடைபெற்றது. தற்போது சென்னை மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,81,347 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் மாநகராட்சி மேயர் பிரியா ராஜனிடம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:சிறுவனின் கையை குதறிய தெரு நாய்: சென்னை மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!
இதில் அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம், வளசரவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை ஆகிய மண்டங்களில் தெருநாய்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகபட்டமாக அம்பத்தூர் மண்டலத்தில் 23,980 தெருநாய்களும் ஆலந்தூர் மண்டலத்தில் 4875 தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.