சென்னை:மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த மாதம் 11ஆம் தேதி சென்னையில் இருந்து இலங்கைக்கு இரண்டு நபர்கள் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதைதொடர்ந்து இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்தியதில், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவரும், சென்னையில் உள்ள கிருஷ்ணகுமாரி மற்றும் முகமது ரிசாலுதீன் ஆகிய மூவரும் இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரி மற்றும் முகமது ரிசாலுதீன் உட்பட மூவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் 1.47 கிலோ கிராம் மெத்தாம்பேட்டமைன் என்கிற போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.