மத்திய சென்னை மக்களவைத் தேர்தல் 2024: மாறன் குடும்பத்தின் கோட்டையை தக்க வைத்தார் தயாநிதி மாறன்! - LOK SABHA ELECTION RESULT 2024 - LOK SABHA ELECTION RESULT 2024
Central Chennai Lok Sabha Election Results 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அமோக வெற்றி பெற்றார். மேலும், மத்திய சென்னையில் பதிவான பிரதான கட்சிகளின் வாக்குகளின் முழு விபரத்தை காணலாம்..
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)
மத்திய சென்னை: மத்திய சென்னைமக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தயாநிதி மாறன் பாஜக வேட்பாளர் வினோஜ்ஜை விட 2,44,689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விவரம்..
வ.எண்
வேட்பாளர்கள்
கட்சி
பெற்ற வாக்குகள்
1
தயாநிதி மாறன்
திமுக
4,13,848
2
வினோஜ்
பாஜக
1,69,159
3
பார்த்தசாரதி
தேமுதிக
72,016
4
கார்த்திகேயன்
நாதக
46,031
தலைநகர் சென்னையில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதியில் ஒன்றான மத்திய சென்னையில் தலைமைச் செயலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, துறைமுகம் என முக்கிய இடங்கள் இருப்பதால் சிறப்புக் கவனம் பெற்ற தொகுதியாக உள்ளது. மேலும், நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் நட்சத்திர தொகுதியாகவும் மத்திய சென்னை திகழ்கிறது. இங்கு திமுக சார்பில் மீண்டும் தயாநிதி மாறன், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் பார்த்தசாரதி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் வினோஜ் பி.செல்வம், மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிட்டனர்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மாலை 4 மணி நிலவரப்படி 2,33076 வாக்குகள் பெற்று 131497 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் விஜோஜ் செல்வம் 101579 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 39444 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் 6 வது சுற்றில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 13,1021 வாக்குகளும், பாஜக வேட்பாளர் விஜோஜ் செல்வம் 58,077 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து, தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 24,427 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி கார்த்திகேயன் 13,363 வாக்குகளும் பெற்றுள்ளனர். அந்த வகையில், திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 72,944 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 1,02161 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை தொடர்ந்து, பாஜக வேட்பாளர் விஜோஜ் செல்வம் 46878 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 18251 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 11,657 வாக்குகள் பெற்றுள்ளார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் இரண்டாது சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 32,966 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை தொடர்ந்து, பாஜக வேட்பாளர் விஜோஜ் செல்வம் 16,949 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 5,467 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 2,017 வாக்குகள் பெற்றுள்ளார்.
மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்தவரையில் கடந்த 7 முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முறை மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 6 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. மாறன் குடும்பத்தினரின் பராம்பரிய வெற்றி களமான மத்திய சென்னையை இந்த முறையும் கைபற்ற திமுக கடும் முயற்சியை மேற்கொண்டது.
2019 தேர்தலில் வென்றது யார்?: 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியின் மொத்த வாக்குகளான 7,71,628 வாக்குகள் பதிவாகின. இவற்றில் தயாநிதி மாறன் (திமுக) 4,48,911 வாக்குகளும், சாம்பால் 1,47,391 (பாமக, அதிமுக கூட்டணி) வாக்குகளும் பெற்றனர். கார்த்திகேயன் (நாம் தமிழர் கட்சி) 30,886 வாக்குகளும், கமிலா நாசர் (மக்கள் நீதி மய்யம்) 92,249 வாக்குகளும், தெகலான் பாகவி (எஸ்டிபிஐ) 23741 வாக்குகளும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.