சென்னை:பெரம்பூர் எம்.பி.எம் சாலையில் கடந்த எட்டாம் தேதி நள்ளிரவு இரண்டு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி (CREDIT -ETVBharat TamilNadu) சிறுவன் மோதிய மற்றொரு இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பலத்த ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 17 வயது சிறுவன் சென்னை பெரம்பூரில் உள்ள ரமணா நகர் பகுதியைச் சேர்ந்த சிவகுரு என்றும் சிறுவன் பல்சர் இருசக்கர வாகனத்தை மிக வேகமாக ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சாலையில் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கொளத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா பானு என்பவர் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில், சிவகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஷர்மிளா பானு தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரும் கடந்த 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த சர்மிளாவின் தந்தை தன் மகள் விபத்தில் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதவிட்டுள்ளார்.
அந்த சிசிடிவி காட்சியில், சிறுவன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்து, பெண் ஓட்டி வந்த வாகனத்தில் மோதியுள்ளார். இதில், இரண்டு இரு சக்கர வாகனங்களும் உடைந்து சிதறியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய திருப்பத்தூர் மக்கள்! - Tirupathur Ration shop issue