சென்னை:சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், வருகிற 13ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்சிக்காக பெண் புகைப்படக் கலைஞர் வேண்டும் என அட்வான்ஸ் தொகை செலுத்தி புக் செய்துள்ளார். எதிர்பாராத விதமாக பெண் புகைப்படக் கலைஞர் வராத காரணத்தால் விஜய், பெண் புகைப்படக் கலைஞர் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனக்கூறி, அட்வான்ஸ் தொகையை திரும்ப அளித்துள்ளார்.
அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுக்கும் போட்டோகிராபர்ஸ் கவனத்திற்கு.. சென்னையில் நடந்தது என்ன? - Attack on photographer - ATTACK ON PHOTOGRAPHER
Attack on photographer: நிகழ்ச்சிக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிச் செலுத்திய போட்டோகிராபரை, இரு நபர்கள் தாக்கியது குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published : May 8, 2024, 3:49 PM IST
நிகழ்ச்சி 13ஆம் தேதி என்ற நிலையில், அவரது கடைக்கு வந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் என இருவர் ஒன்று சேர்ந்து, விஜயின் ஸ்டுடியோவில் புகுந்து, அவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. விஜயும் திருப்பி தாக்கியுள்ளார். இது குறித்து இருதரப்பும் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்தான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செம்பியம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:வேலூரில் தூய்மைப்பணியாளரை இடித்து விட்டு அலட்சியமாக சென்ற நபர்..சிசிடிவி காட்சிகள் வைரல்! - Man Knocking The Sanitation Worker