தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் பெண்களின் உள்ளாடைகளை குறி வைத்து திருடிய நபர் கைது! - NELLAI WOMEN UNDERWEAR THIEF

திருநெல்வேலியில் காயப்போட்டுள்ள பெண்களின் உள்ளாடைகளை திருடி கொண்டு செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் உள்ளாடை திருடனை கைது செய்தனர்.

உள்ளாடையை திருடும் நபரின் சிசிடிவி காட்சி
உள்ளாடையை திருடும் நபரின் சிசிடிவி காட்சி (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 11:27 AM IST

திருநெல்வேலி :அல்வாக்கு பெயர் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் அரிவாள் வன்முறைகள் ஒரு பக்கம் அச்சுறுத்தலை கொடுத்தாலும், மனதளவில் பாதிக்கப்பட்ட சில சைக்கோ மனிதர்களின் செயல்பாடுகளால் சாமானிய மக்களின் மன அமைதி வெகுவாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாநகரில் அதிகாலை நேரத்தில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடி ரசித்து எடுத்துச் செல்லும் சைக்கோ திருடனால் பெண்கள் உறக்கத்தை தொலைத்துள்ளனர்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காயப்போட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகள் சமீப நாட்களாக காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.

உள்ளாடை மட்டும் காணாமல் போவதை உணர்ந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட நிலையில், பெரும்பாலான வீடுகளில் காணாமல் போனது தெரிந்ததும் சில வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். குறிப்பிட்ட சிசிடிவி கேமராவில் அந்த நபர் உள்ளாடையை திருடி செல்வது பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:கோவில்பட்டி சிறுவன் மரண வழக்கு; ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை!

அந்த சிசிடிவி காட்சியில், அதிகாலை நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கொடியில் காயபோட்டிருக்கும் உள்ளாடைகளை எடுத்து அதனை கையில் வைத்து ரசித்து பார்த்து பின்னர் தனது பாக்கெட்டுக்குள் வைத்து எடுத்து செல்கிறார். இதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக குடும்பத்தாருடன் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எடுத்து கொண்டு திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் மக்கள் அசந்து உறங்குவது வழக்கம் இதனை தனது சாதமாக்கிக் கொண்டு வீட்டில் வெளியே காய போட்டிருக்கும் உள்ளாடைகளை ரசித்து திருடி எடுத்துச் செல்லும் நபரை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''அந்த நபர் சற்று மனநிலை சரியில்லாதவர் போல் தெரிகிறது. ஆனாலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று கூறினர்.

திருநெல்வேலியில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பெண்களின் உள்ளாடையை திருடி செல்லும் நபரின் செயல் அப்பகுதி பெண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உள்ளாடைகள் திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது.

இந்நிலையில் பெண்கள் உள்ளாடையை குறி வைத்து திருடிய உள்ளாடை திருடனை திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருநெல்வேலி தச்சநல்லூர் பெருமாள் வடக்கு தெருவினை சேர்ந்த தானப்பன் ( 52) என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details