தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு...குற்றச்சாட்டுகள் என்னென்ன? - CBI BOOKS KARTI CHIDAMBARAM

டியாஜியோ என்ற நிறுவனம் இந்தியாவில் மதுபானம் விற்பனை செய்வதற்கு 15000 டாலர் பெற்றுக் கொண்டு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

புதுடெல்லி:முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக முறைகேடு வழக்கு ஒன்றை சிபிஐ பதிவு செய்துள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த டியாஜியோ மதுபான நிறுவனம் இந்தியாவில் சுங்க வரி இன்றி மதுபானம் விற்பனை செய்வதற்கான உரிமையை பெற்றுத் தந்ததாக அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கார்த்தி சிதம்பரம், அவரது நெருங்கிய ஆதரவாளர் எஸ்.பாஸ்கரராமன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ஸ்காட்லாந்தை சேர்ந்த டியாஜியோ, சீக்வோயா கேபிடல் நிறுவனத்தில் இருந்து சந்தேகப்படும் வகையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.

"அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் பல்வேறு முன்மொழிவுகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், ஸ்காட்லாந்தை சேர்ந்த டியாஜியோ, சீக்வோயா கேபிடல் ஆகிய நிறுவனங்களில் இருந்து சந்தேகப்படும் வகையில் பணமானது கார்த்தி சிதம்பரம், அவரது நெருங்கிய ஆதரவாளர் எஸ்.பாஸ்கரராமன் ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ள அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது,"என சிபிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:“மானமும், அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்” - துரைமுருகன் பதிலடி!

சிபிஐ விசாரணையின் மூலம், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டியாஜியோ, இங்கிலாந்து நிறுவனம் இறக்குமதி வரி இல்லாமல் ஜானிவாக்கர் விஸ்கியை இறக்குமதி செய்ய உபயோகப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்த பெயர் குறித்து கேட்டபோது அவர்கள் தரப்பில் இருந்து உடனடியாக பதில் கிடைக்கவில்லை.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சுங்கவரி இல்லாத மதுவை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்வதற்கான ஏகபோக உரிமையை பெற்றிருந்தது. எனவே டியாஜியோ நிறுவனம் டியாஜியோ குழுமத்தின் சுங்கவரி இல்லாத பொருட்களை இந்தியாவில் விற்பதற்கு இது தடையாக இருந்தது. இதனால் இந்தியாவில் சம்பந்தப்பட்ட ஜானி வாக்கர் விஸ்கி உள்ளிட்ட பொருட்களை விற்க முடியாமல் அந்த நிறுவனம் 70 சதவிகிதம் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்தது என சிபிஐ கூறியுள்ளது.

இதனால், டியாஜியோ நிறுவனமானது கார்த்தி சிதம்பரத்தை அணுகி, தங்கள் நிறுவன விஸ்கியை சுங்க வரி இல்லாமல் விற்பதற்கான தடையை நீக்க உதவ வேண்டும் என்று கோரியது. அதற்கு பதிலாக 15000 டாலர் பணம் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆலோசனைக்காக தரப்பட்டது என்ற பெயரில் பணப்பரிமாற்றம் நடந்தது என்று சிபிஐ கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details