சென்னை:ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகனை பராமரித்து வரும் இரயில்வே அதிகாரியை இடமாற்றம் செய்த இரயில்வே நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாகவியல் தீர்ப்பாயம் இன்று (மே 20) உத்தரவிட்டுள்ளது.
மத்திய தெற்கு இரயில்வேயில் குண்டக்கல் கோட்டத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் கவுரிதனயன். இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை கவனிக்க வேண்டும் எனக் கூறி, தெற்கு இரயில்வேயிடம் இடமாற்றம் கோரினார். அதன்படி, அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு, அரக்கோணத்தில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் அரக்கோணத்தில் பணியாற்றி வந்த அவரை, மீண்டும் இடமாற்றம் செய்து இரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தனது மகனை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஓய்வு பெறும் வரை அரக்கோணத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என இரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் நிராகரித்து இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.