திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஓர் 17 வயது சிறுமி. இவரிடம் திம்மாம்பேட்டை அடுத்த பாட்டூர் பகுதியில் வசித்துவரும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் அண்ணாமலை (20) என்பவர் நண்பராக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அண்ணாமலை கேட்ரிங் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் சிறுமியிடம் பேசக்கூடாது என அவரின் பெற்றோர் அண்ணாமலையிடம் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (ஆக 3) சிறுமியின் தந்தை சக்திவேல் மற்றும் தாய்மாமன் விஜயகுமார் ஆகிய இருவரும் அண்ணாமலையை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டரிங் பணி உள்ளதாக கூறி ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனிற்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு, குடோனில் அடைத்து வைத்து சக்திவேல் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட சிலர் இரும்பு ராடால் அண்ணாமலையை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அண்ணாமலை மயங்கியதால், இரண்டு முறை தண்ணீர் தெளித்து எழுப்பி மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது.