சென்னை:விமானங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற இமெயில் வருவதும், அவற்றை சோதனை செய்யும் போது வந்த தகவல் புரளி என்பது தெரிய வருவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று 3 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், சென்னை விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிலிகுரியில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாகவும், அவை வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. அதே போன்ற இமெயில்கள் அந்த மூன்று விமான நிறுவனங்களுக்கும் சென்றுள்ளது
அதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் தங்களுடைய பணிகளை துரிதமாக தொடங்க தயாராக இருந்தனர். அதே நேரத்தில் 3 விமானங்கள் சென்னைக்கு வந்து வானில் பறந்து கொண்டு இருந்தன.