தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தையைப் பார்க்கச் சென்ற சிறுவன் முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு.. போலீசார் விசாரணை! - Boy Mysterious Death in Dharmapuri - BOY MYSTERIOUS DEATH IN DHARMAPURI

Boy Mysterious Death: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளி முன்பு, முகம் சிதைந்த நிலையில் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்த போலீசார்
சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்த போலீசார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 8:55 PM IST

தருமபுரி:பென்னாகரம் அடுத்த தாசம்பட்டி, அரசு உயர் நிலைப்பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், பென்னாகரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் காவல் துறையினர், சிறுவனின் சடலத்தை ஆய்வு செய்தனர்.

அதில் கற்களோ அல்லது வேறு ஏதேனும் பலமான ஆயுதம் கொண்டு தாக்கி சிறுவனின் முகம் சிதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும், உடலில் வேறு எங்கேயும் காயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். இதனையடுத்து, சிறுவன் யார் என விசாரணை நடத்தினர். அதில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த சிறுவன், பென்னாகரம் அருகே உள்ள பண்டஅள்ளி அடுத்த திப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் மற்றும் குமுதா தம்பதியின் மூத்த மகன் யாதவன் என தெரிய வந்தது.

யாதவன் பண்டஅள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, பெற்றோர் பெருமாள் மற்றும் குமுதா இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குமுதா கோபித்துக் கொண்டு, தனது தாய் வழி உறவினர் வீடான தாசம்பட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் இளைய மகன் வால்பாறையில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது பாட்டி வீட்டில் இருந்த யாதவன், திப்பட்டிக்குச் சென்று தனது தந்தையை பார்த்து விட்டு வருவதாகக் கூறி நேற்று மாலை சென்றதாகவும், இன்று காலை தாசம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி அருகே மர்மமான முறையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறுவனை யாரோ அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுவனின் மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கஞ்சா படுத்திய பாடு.. மகனை உலக்கையால் அடித்துக் கொன்ற பெற்றோர்.. சாத்தூரில் பரபரப்பு! - parents killed son

ABOUT THE AUTHOR

...view details