மயிலாடுதுறை: தமிழகத்தின் மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய வருவாயை நசுக்கும் பாஜக நிச்சயம் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சங்கர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் மாவட்ட செயலர் குணசேகரன் தலைமையில் இன்று (மார்.03) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சங்கர், “பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தமிழகத்தில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என்று தீர்மானித்துள்ளோம். ஜூலை 1 ஆம் தேதி கிரிமினல் சட்டங்களை மாற்றி புதிய கிரிமினல் சட்டங்களைப் பாஜகவினர் நடைமுறைப்படுத்த உள்ளனர். அதனை நடைமுறைப்படுத்தினால் நாட்டில் ஜனநாயக உரிமை இருக்காது.