தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டின் செலவினத்தை குறைக்க 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அவசியம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து - One Nation One Election

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் கொண்டு வருவதற்காக கல்வியாளர்கள், நீதிபதிகள், துணைவேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 9:13 PM IST

தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடிக்கு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார்.

இதில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் மூன்று கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பிசியாக உள்ள நகரங்களில் எப்எம் ரேடியோ அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

தமிழகத்தில் ரயில்வே திட்டத்திற்கு மட்டும் 6,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வருவதற்காக கல்வியாளர்கள், நீதிபதிகள், துணை வேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது.

2047-இல் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும் என்றால் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும் தேர்தலில் அதிக செலவினங்கள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமான ஒன்று.

தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று வந்ததை பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் தான் இந்த மது ஒழிப்பு மாநாடு" எனறு கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; செல்வபெருந்தகையை பதவி நீக்கம் செய்ய எச். ராஜா வலியுறுத்தல்!

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை துரிதமாக செயல்பட்டு தமிழக மீனவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க ஜிபிஎஸ் கருவிகள் போன்றவற்றை வழங்கியுள்ளோம். மேலும் மீனவர்கள் ஆழ் கடல் மீன் பிடிக்க மானியத்துடன் கூடிய பெரிய மீன்பிடி படகுகளை வழங்கியுள்ளோம். மீனவர்களுக்கு கடல் பாசி பூங்கா கொண்டு வந்துள்ளோம். மேலும் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உடனடியாக இலங்கை அரசிடமிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடை எண்ணிக்கை குறைக்கப்படும் என கூறியது. ஆனால் தற்போதுதான் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கிராமங்களில் அங்கன்வாடி மையம் பள்ளிக்கூடம் இருக்கிறதோ, இல்லையோ டாஸ்மார்க் உங்களை வரவேற்கிறேன் என்கின்ற விளம்பரங்கள் இருக்கின்றன. வரும் 2026-இல் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details