மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், மயிலாடுதுறை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், மும்பையில் அவரை கைது செய்து உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டும் மிரட்டிய வழக்கில் ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.