சென்னை:நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்றாவது நாள் அமர்வு இன்று (பிப்.14) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய வினாக்கள் விடை நேரத்திற்கு பிறகு பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள கவலைகளையும் அதில் உள்ள பிரச்னைகளையும் பாஜக புரிந்து கொள்கிறது. மக்கள் தொகை, காலநிலை மாற்றதிற்கு ஏற்ப ஒரே நாடு, ஒரே தேர்தலுக்குக்காக முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்சிகளுக்கும் இது தொடர்பாக கருத்துக் கூற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.