தூத்துக்குடி:தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்தவர் பால பொய் சொல்லான். தொழிலதிபரான இவர், பாரதிய ஜனதா கட்சியில் வணிகர் பிரிவு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பால பொய் சொல்லணும், அவரது இரண்டாவது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பால பொய் சொல்லான் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபாகம் காவல் நிலையத்தில் அவரது இரண்டாவது மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பால பொய் சொல்லானின் இரண்டாவது மனைவிக்கும், அவரது வீடு அருகே வசித்து வரும் அந்தோணிசாமி என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தோணிசாமியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, தனது இரண்டாவது மனைவி தனக்கு எதிராக செயல்படுவதாக எண்ணிய பால பொய் சொல்லான், அந்தோணிச்சாமியை கூலிப்படை மூலம் தாக்குதல் நடத்த எண்ணியதாக கூறப்படுகிறது.