சென்னை:சென்னை அம்பத்தூரில் பாஜக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டையை பாஜக ஒருகிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு உறுப்பினர்களும் 74 நபர்களை பாஜகவில் இணைத்து, உறுப்பினர் அடையாள அட்டையை வழங்க வேண்டும். இதுவே இந்திய பிரதமருக்கு நாம் அளிக்கக்கூடிய பரிசாக இருக்கும்”என்றார்.
மேலும் விடுதலை சிறுத்தை கட்சி நடத்தக்கூடிய மது விலக்கு மாநாடு பேசிய அவர், “முதலில் மாநாட்டிற்கு வரக்கூடிய தொண்டர்கள் மது அருந்தாமல் வரவேண்டும். இதை திருமாவளவன் அவர் கட்சி தொண்டர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மதுவுக்கு எதிராக நடத்தக்கூடிய மாநாடு வரவேற்கத்தக்கது. மேலும் மதுவுக்கு எதிராக மாநாடு நடத்துவதால் தமிழகத்தில் தாக்கம் ஒன்று இருக்காது.