தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஜவாஹிருல்லா, திருமாவளவன் இருவரும் தேச துரோகிகள்" - எச்.ராஜா பேச்சால் பரபரப்பு! - H RAJA

ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகியோர் தேசத் துரோகிகள் எனவும், அரசாங்கம் இவர்களை கண்காணிக்க வேண்டும் என எச்.ராஜா பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Thirumavalavan  Amaran  எச் ராஜா  H Raja talk about Thirumavalavan
எச்.ராஜா, திருமாவளவன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 11:46 AM IST

சென்னை: சென்னை விமான நிலையம் வந்த பாஜக பொறுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் நடந்த பெரியார் நூலகம் திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் பாடப்படவில்லை. ஆனால், ஆளுநர் பங்கேற்ற விழாவில், தமிழ்தாய் வாழ்த்தைப் பாடியவர்கள், ஒரு வரியை விட்டு விட்டனர். உடனே ஆளுநருக்கு எதிராக இனவாத குற்றம் சாடிய முதலமைச்சருக்கு சுய கவுரவம் இருந்தால், பதவியை ராஜினாமா செய்வாரா?

பெரியாருக்குப் பயந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லையா? ஏனென்றால் பெரியார், தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர் தான். ஒரு முதலமைச்சர் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும் ஆனால், நடந்து கொள்ளவில்லை.

தற்போது உலகமே வியக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்து மக்களையும், பாரத நாட்டையும் நேசிக்கக் கூடியவர். அமெரிக்க ஜனாதிபதியாக வந்ததால், இந்திய - அமெரிக்க உறவு மட்டுமின்றி, வர்த்தகமும் பெருகும்.

இதையும் படிங்க: 'அமரன்' படத்திற்கு எதிர்ப்பு: திரையரங்கை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!

ஜவாஹிருல்லா, திருமாவளவன் அனைவரும் பச்ச தேசத் துரோகிகள் என்று தெரிவித்த அவர், இவர்களை அரசாங்கம் கண்காணிப்பில் வைக்க வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற நபர்கள் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதில் என்ன உத்தரவாதம். இது திரைப்படத்திற்கான பிரச்சனை இல்லை. அமரன் படத்தை எதிர்ப்பதாக நினைத்து, தேச விரோதத்தைப் பரப்புவதாக இருந்தால், தேச பக்தர்கள் இதுபோன்ற தீய சக்திகளுக்கு எதிராக களத்தில் இருக்க வேண்டும் என எச்சரிக்கைவிடுகிறேன்.

திராவிட கட்சிகள் ஜாதி வெறியர்கள், மொழி வெறுப்பு கொண்டவர்கள். மாநில வெறுப்பு, தேச வெறுப்பு கொண்டவர்கள் தான் திராவிட இயக்கங்கள். நான் காஷ்மீர் பைல் திரைப்படத்தையும் ஆதரித்தேன், அமரன் படத்தை ஆதரிக்கிறேன். படத்தை சிறப்பாகக் கொடுத்துள்ளனர். திமுக ஆதரிப்பதற்காக நான் ஆதரிக்க மாட்டேன் எனக் கூறமாட்டேன். ஏன் ஆதரிக்கிறீர்கள் என மு.க.ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details