தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக நிர்வாகி சவுதாமணி பிணையில் விடுவிப்பு! - சவுதாமணி விவகாரம்

BJP Executive Sowdha mani Case: பாஜக நிர்வாகி சவுதாமணி மீதான புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி, சவுதாமணியின் நீதிமன்றக் காவலை நிராகரித்து பிணையில் விடுவித்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BJP Executive Sowdhamani Case
BJP Executive Sowdhamani Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 10:16 PM IST

திருச்சி:பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருபவர், சவுதாமணி. இவர் இதற்கு முன்னர் ஆசிரியையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். மேலும், தற்போது பெண் தொழில் முனைவோராகவும் சவுதாமணி செயல்பட்டு வருகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர்.

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, ஏற்கனவே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் தனது 'X' வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு, திமுக ஆட்சியில் மது புழக்கம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக அவதூறு கருத்து பரப்பியதாகக் கூறி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதாமணி மீது, திருச்சி திமுக மத்திய மாவட்ட தொழில்நுட்ப பிரிவினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக எழுந்த இந்த புகார் மனுவின் அடிப்படையில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, திருச்சி சைபர் கிரைம் போலீசாரால், சென்னையில் இன்று (மார்ச் 6) காலை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சவுதாமணி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கலகம் செய்யத் தூண்டுதல்‌ (153), பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2-இல் நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை எனக் கூறி, சவுதாமணியின் நீதிமன்றக் காவலை நிராகரித்து பிணையில் விடுவித்தார். மேலும், காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீதான வழக்கு; சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ABOUT THE AUTHOR

...view details