வேலூர்:"என் மண் என் மக்கள்" யாத்திரையின் ஒரு பகுதியாக, இன்று (பிப்.03) பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். முன்னதாக, குடியாத்தம் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கள் இயக்கத்தினர் இறக்கும் முதல் கள்ளை தான் குடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்த யாத்திரை, மாற்றங்களுக்கான யாத்திரை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 12 கோடி வீட்டில் கைப்பற்றியதால் தேர்தலில் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2019இல் நடைபெற்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்
விவசாயிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கையான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், கால்வாய் சீரமைப்பு, மாம்பழத்திற்கான குளிர்சாதன வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத எம்.பிதான் கதிர் ஆனந்த். அமைச்சர் துரைமுருகனின் ஊரான கே.வி.குப்பம், காங்குப்பம் பகுதியில் கதிர் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி ஏ.சி.சண்முகம் லீட் கொடுத்தார். விரைவில் அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் வீட்டின் கதவைத் தட்ட வாய்ப்பு உள்ளது” என்றார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை, 2024 தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்னும் காலம் இருக்கிறது. மனோஜ் தங்கராஜுடன் விவாதிக்க நான் எனது செய்தித் தொடர்பாளரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.