மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த மகாராஜா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜூலை 3ஆம் தேதி திருநெல்வேலி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், Grindr Gay app என்ற பாலியல் செயலியைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பணம் பறித்ததாகவும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆதலால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாக" கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு ஆஜராகி, “மனுதாரர் மொபைலில் (Grindr Gay app) ஹோமோ செக்ஸ் செயலியைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளார். 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, மனுதாரர் Grindr Gay app என்ற மொபைல் செயலி மூலம் ஹோமோ செக்ஸ் பிரியர்களை தொடர்பு கொண்டு, இதில் இணைய வைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து கிரெடிட் கார்டு, மொபைல், ஒரு லட்சம் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.