தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு விவகாரங்களில் சிக்கிய வழக்கறிஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்! - Bar council of TN and Puducherry - BAR COUNCIL OF TN AND PUDUCHERRY

Bar council of TN and Puducherry: வழக்கறிஞர்கள் வில்லியம்ஸ் மற்றும் பாசிலுக்கு எதிராக 2021-ல் மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர்கள் இருவரும் வழக்கறிஞராக தொழில் செய்ய விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் (Credits - Bar council of TN and Puducherry website)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 8:19 PM IST

சென்னை:இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வில்லியம்ஸ் மற்றும் பாசிலுக்கு எதிராக 2021-ல் மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததால், அவர்கள் இருவரும் வழக்கறிஞராக தொழில் செய்ய விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுகிறது.

துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை ரவுடிக்கு வழங்கியது மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈ.சி.ஆர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் வழக்கு முடியும் வரை வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

மேலும், வழக்கறிஞர் சங்கத் தலைவரை அவதூறாகப் பேசி ஆடியோ வெளியிட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம் என்பவர் வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. வழக்கறிஞர் சரவணன் மீது போதைப்பொருள் தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், வழக்கு முடியும் வரை வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மயிலாப்பூரைச் சேர்ந்த சேதுபதி பாண்டியனுக்கு வழக்கறிஞராக தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் வழக்கறிஞர் சேவை; இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details