வேலூர்:வேலூர் மாவட்டம், காட்பாடியில் செயல்பட்டு வரும் மின்வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் MRT (METRE, READING, TESTING) பிரிவில் செயற்பொறியாளராக (EE) ஆக பணிபுரிந்து வருவார் ரவிச்சந்திரன்.
இவர் பலரிடம் மின் இணைப்பிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில் நேற்று மின்வாரியத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் HT ஒப்பந்ததாரரான, ராணிப்பேட்டையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரிடம் பனப்பாக்கத்தில் உள்ள கல்குவாரிக்கு 700 KVA புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு ரவிச்சந்திரன் லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து வாசுதேவன், ரவிச்சந்திரனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.