தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐடி அதிகாரிகள் போல் நடித்து மோசடி.. திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது! - Sivakasi Money Fraud Case - SIVAKASI MONEY FRAUD CASE

Sivakasi Money Fraud Case: சிவகாசி அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக நிர்வாகிகள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதானவர்களின் புகைப்படம்
கைதானவர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 1:52 PM IST

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், தாயில்பட்டி ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் (45) பட்டாசு ஏஜென்ட்டாக உள்ளார். இவரிடம் தாயில்பட்டி கோட்டையூரைச் சேர்ந்த கருப்பசாமி (55), சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்த ரமேஷ் (38), வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (40), இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (47) ஆகியோர், கடந்த மே 6ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், கடந்த மூன்று நாட்களாக கூடுதலாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி வருவதாகவும் சௌந்தரராஜன் சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் 419, 406, 420, 323, 506(i) IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிவகாசி டவுன் போலீசார், மோசடியில் ஈடுபட்டதாக சௌந்தரராஜன் குற்றம் சாட்டிய 4 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆன்லைன் வர்த்தக தளங்களில் வேலை என மோசடி.. - Online Job Scam

ABOUT THE AUTHOR

...view details