தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் பறிமுதல் செய்யப்பட்ட 50 வாகனங்கள் ஜூன்18ல் பொது ஏலம்! - Vehicles Auction at Ariyalur - VEHICLES AUCTION AT ARIYALUR

Vehicle Public auction: அரியலூரில் மது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 18ஆம் காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்
அரியலூர் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 10:57 AM IST

Updated : Jun 17, 2024, 2:53 PM IST

அரியலூர்:அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களின் உத்தரவின்படி, "மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜய ராகவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் ஜூன் 18ஆம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது.

ஏலம் எடுப்பதற்கான விதிமுறைகள்:இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், ஏலம் விடப்படும் அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூபாய் 1000 செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம், அவருடன் பிறருக்கு அனுமதியில்லை.

வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் முன்பணம் திருப்பி தரமாட்டாது.

வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும், வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை ஏலம் நடைபெறும் தேதி அன்று காலை 8 மணி முதல் பார்வையிடலாம்.

ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த 50 இருசக்கர வாகனங்களும் கடந்த மாா்ச் 21ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் ஏலம் விடுவது நிறுத்தப்பட்டது. தற்போது தேர்தல் நிறைவடைந்து தேர்தல் நடத்தை விதிகள் நிறைவடைந்ததால், வரும் ஜூன் 18ஆம் பொது ஏலம் விடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நரேந்திர மோடி 3.0: மத்திய அமைச்சர்களின் இலாகா பட்டியல்!

Last Updated : Jun 17, 2024, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details