சென்னை : கடந்த 2023-24 ஆம் கல்வியாண்டில், நூற்றுக்கணக்கான கல்லூரிகளில், போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்றதை அறப்போர் இயக்கம் கடந்த ஜூலை 23 ஆம் தேதியன்று ஆதாரத்துடன் வெளியிட்டது. அந்த ஆதாரங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய, மாநில உயர்கல்வித்துறை சார்ந்தோருக்கும் மற்றும் விசாரணை அமைப்புக்கும் புகார் அளித்தது.
அதைத்தொடர்ந்து இன்று (ஆக 27) பேராசிரியர் அனில் D.சஹஸ்ரபுதே (Chairman - The National Board of Accreditation, NEW Delhi) அவர்களுக்கும், பேராசிரியர் கணேசன் கண்ணபிரான், (The National Assessment and Accreditation Council director) அவர்களுக்கும் புகார் மற்றும் ஆதாரங்களை அனுப்பியுள்ளது.
அந்த புகாரில், "அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழுவுடன் கூட்டு சேர்த்து கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற நிலையில், அந்த பட்டியலில் உள்ள பல கல்லூரிகள் NBA மற்றும் NAAC அங்கீகாரம் பெற்றுள்ளது.