தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தரமான காற்று இல்லை.. தீபாவளி நாளில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்! - AQI IN CHENNAI TODAY

சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு (AQI) உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தீபாவளி
சென்னையில் தீபாவளி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 9:16 PM IST

சென்னை: தீபாவளித் திருநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், அனைவரும் புத்தாடைகள் உடுத்தி, இனிப்புகள் உண்டு, பட்டாசுகள் வெடித்து தங்களது தீபாவளித் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். இதனால் வானில் வர்ணஜாலங்களும் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு (AQI) மோசமாக உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையின் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு உள்ளதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அதிக பட்டாசுகளோடு சென்ற ஸ்கூட்டி.. சிதறிய உடல்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

இதன்படி, பெருங்குடியில் 262, ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. அதேபோல், கொடுங்கையூரில் 165, மணலியில் 189, ராயபுரத்தில் 169 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மிதமான அளவில் அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் எந்த இடத்திலும் தரமான காற்று தற்போது இல்லை என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details