தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுமார் ரூ.12 லட்சம் லஞ்சம்; சுத்துப் போட்டுப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை!

உதகை நகராட்சி ஆணையாளரிடம் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.

உதகை நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா , பறிமுதல் செய்யப்பட்ட பணம்
உதகை நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா , பறிமுதல் செய்யப்பட்ட பணம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 1:00 PM IST

நீலகிரி:உதகை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வரும் ஜஹாங்கீர் பாஷா என்பவர் அதிகபடியாக லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்துள்ளது. இதனால், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை ரகசியமாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜஹாங்கீர் பாஷா லஞ்சம் பணத்துடன் சென்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், கோத்தகிரி வழியாக காரில் சென்று கொண்டிருந்த ஜஹாங்கீர் பாஷாவை மடக்கி விசாரணை செய்ததில், அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உதகை நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

விசாரணையில், தேனி நகராட்சி ஆணையாளராக இருந்த ஜஹாங்கீர் பாஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உதகை ஆணையாளராக பணி மற்றப்பட்டுள்ளார். மாஸ்டர் பிளான் விதி அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் கட்டடம் கட்ட விதிமுறைகள் அதிகளவில் உள்ளது. இதற்கிடையே நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புதிதாக தொடங்கிய ஜவுளிக்கடை கட்டடம், பார்க்கிங் டெண்டரை குறைவாக விட்டு லஞ்சம் பெறுவதாக நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு? - நீதிபதிகள் நேரில் ஆய்வு!

இதனால், லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரை ரகசியமாக கணிகாணித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (நவ.09) இரவு, ஜஹாங்கீர் பாஷா பணியை முடித்துவிட்டு சொந்த ஊரான சென்னைக்கு கோத்தகிரி சாலை வழியாக காரில் லஞ்சப் பணத்துடன் சென்று கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலசார், துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி, சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் அடங்கிய குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை (Credits - ETV Bharat Tamil Nadu)

தகவலின் பேரில், போலீசார் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் நகராட்சி ஆணையாளரின் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில், கணக்கில் வராத ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details