தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டா மாறுதல் பெற லஞ்சம் வாங்கிய ஆவடி சார் ஆய்வாளர்.. கையும் களவுமாக சிக்கி சிறை..! - AVADI THASILDHAR OFFICE BRIBE

பட்டா மாறுதல் பெற 15,000 ரூபாய் லஞ்சம் பெற்ற ஆவடி சார் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார் ஆய்வாளர் சுமன், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்
சார் ஆய்வாளர் சுமன், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 8:37 PM IST

ஆவடி: லஞ்சம் கேட்ட ஆவடி சார் ஆய்வாளரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர். சார் ஆய்வாளருடன் சேர்ந்து உதவியாளரும் சிறைக்கு சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம், கோபாலபுரம், தென்றல் நகர், 3-ஆவது பிரதானச் சாலையைச் சேர்ந்தவர் சந்திரன் (30). கடந்த 4-ஆம் தேதி இவர் தனது தந்தை சீனிவாசன் பேரில் உள்ள நிலத்திற்கு ஆன்லைன் பட்டா பெறுவதற்காக, ஆவடி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து நில அளவைப் பிரிவு சார் ஆய்வாளர் சுமன் என்பவர், நிலத்தை அளந்து கொடுப்பதற்கு 15,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் லஞ்சம் கொடுக்க விரும்பாததால், திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் கணேசனிடம் புகார் செய்துள்ளார்.

இதையும் படிங்க:யார் அந்த சார்..? எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது என்ன..? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கிளம்பும் கேள்விகள்!

புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய 15,000 பணத்தை சந்திரனிடம் கொடுத்து, அதனை சார் ஆய்வாளர் சுமனிடம் கொடுக்க கூறியுள்ளார். இந்த நிலையில், சந்திரன் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சார் ஆய்வாளர் சுமனிடம் லஞ்சப் பணத்தை கொடுக்க முயன்றார்.

அப்போது அவர், தனது உதவியாளர் ஊத்துக்கோட்டை மெய்யூர் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் (28) என்பவரிடம் பணத்தை கொடுக்க கூறியுள்ளார். இதையடுத்து சந்திரன் அவரிடம் 15,000 பணத்தை கொடுத்த போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் போலீஸார் பொன்னையனை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் சார் ஆய்வாளர் சுமனையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் பிறகு, போலீசார் இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆய்வாளர் லஞ்சம் கேட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்முன்னே லாவகமாக சிக்கி கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,இந்தசம்பவம்அரசுஅலுவலகங்களில்லஞ்சம்கேட்கும்அதிகாரிகளுக்குபணிந்துபோகாமல்,அவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கவைக்கவும்பொதுமக்களுக்குநம்பிக்கைஅளித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details