திருவண்ணாமலை:பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த தீபத் திருவிழாவிற்கு தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கூட பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து, 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
அண்ணாமலையார் கோயிலில் போலீசார் ஆய்வு (Credit - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில் தீபத் திருவிழா அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால், பாதுகாப்பு நலன் கருது போலீசார் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கோயிலில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவஆசீர்வாதம், வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க், வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் தேவராணி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரன்ஸ்ருதி, திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உள்ளிட்ட காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:"ராஜராஜ சோழன் சமாதி; உடையாளூரில் அகழ்வராய்ச்சி" திமுக எம்எல்ஏ, இயக்குநர் மோகன் கோரிக்கை!
அப்போது பக்தர்கள் கோயிலுக்குள் வரும் வழிகள், வெளியே செல்லும் வழிகள், கோயிலுக்குள் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்தனர். முன்னதாக கோயிலுக்கு வருகை புரிந்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.